புற்றில் உறையும் பாம்புகள் ~ இராசேந்திர சோழன்
Manage episode 338384026 series 3099188
தமிழ்ச் சிறுகதை மரபில் தன்னுடைய ‘எட்டு கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் அதிர்வுகளோடு அடியெடுத்துவைத்த இராசேந்திர சோழன் ஒரு முக்கியமான நிகழ்வு. மார்க்ஸியமும் நவீன அழகியலும் அபூர்வமாக இணைந்த முதல் தமிழ் சாத்தியம் அவர். எட்டு கதைகளோடு வெளிவந்த இவரது இன்னொரு சிறுகதை நூலான ‘பறிமுதல்’ முற்போக்கு இலக்கிய வகைமையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய தொகுப்பாகும். மொழியின் செம்மையும் விமர்சன வன்மையும் கொண்ட அவருடைய படைப்புகள் மனிதர்களின் உளவியலுக்குள், குறிப்பாக ஆண் -பெண் உறவு சார்ந்த பிரமைகள், அச்சங்கள், மயக்கங்களுக்குள் பயணிப்பவை. ’புற்றில் உறையும் பாம்புகள்’ பாம்புகள் சிறுகதை, இவரின் குறிப்பிடத்தக்க சிறுகதையாக அறியப்படுகிறது.
222集单集