தங்க ஒரு ~ கிருஷ்ணன் நம்பி
Manage episode 340730950 series 3099188
கிருஷ்ணன் நம்பி குமரி மாவட்டத்தில் அழகியபாண்டிபுரத்தில் பிறந்து பூதப்பாண்டி என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவரும் சுந்தர ராமசாமியும் இலக்கிய இரட்டையர் என்று அறியப்பட்டார்கள். 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிருஷ்ணன் நம்பிக்கு திருமணம் ஆயிற்று. மனைவி பெயர் ஜெயலட்சுமி. `நவசக்தி’யில் ஃபுருஃப் ரீடர் வேலை பார்த்தார். அப்போது ப. ஜீவானந்தம் அவர்களின் தொடர்பு கிடைத்தது . கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். கிருஷ்ணன் நம்பி வை. கோவிந்தனின் சக்தியில் `நாட்டுப்பாடல்கள்’ பற்றிய அவரது முதல் கட்டுரையை எழுதினார். 1950 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்துசிறுவர் பத்திரிகையான `கண்ணனில்’ தொடர்ந்து `சசிதேவன்’ என்கிற பெயரில் குழந்தைப் பாடல்கள் எழுதினார். கிட்டத்தட்ட சுமார் 35 பாடல்கள் கண்ணனில் வெளிவந்தன. அச்சில் வெளிவந்த நம்பியின் முதல் சிறுகதை `சுதந்திர தினம்’ (1951). இவரின் ’தங்க ஒரு’ சிறுகதை மிக முக்கியக் கதையாகக் கருதப்படுகிறது.
222集单集